லைஃப்ஸ்டைல்
வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க எளிய முறைகள்

பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க எளிய முறைகள்...

Published On 2019-07-20 03:18 GMT   |   Update On 2019-07-20 03:18 GMT
மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை எளிய முறையில் எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.
மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோ அவன், ஏசி, டிவி என்று எந்த வீட்டு உபகரணங்களையும் எவ்வளவு உபயோகப்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வதும் அவசியம். இது போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை எளிய முறையில் எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.

ஃபிரிட்ஜ்

365 நாட்களும் 24 மணி நேரமும் வேலை செய்யும் ஒரு பொருள் என்றால் அது ஃபிரிட்ஜ் ஆகத்தான் இருக்கும். பல பேர் வீடுகளில் இந்தப் பொருளானது சுத்தம் செய்யப்படாமல் மிகவும் மோசமாக இருப்பதைப் பார்க்கலாம்.

ஒரு மென்மையான நன்கு பிழியப்பட்ட ஈரத்துணியால் ஃபிரிட்ஜின் வெளிப்பாகத்தைத் துடைக்க வேண்டும். உட்புறத்தை மிகவும் மைல்டான டிடர்ஜெண்ட் பவுடரை உபயோகப்படுத்தி உள்ளே படிந்திருக்கும் உணவுப் பொருள், கறைகளைத் துடைக்கலாம். மேலும், உள்ளிருக்கும் கண்ணாடி, பிளாஸ்டிக் ட்ரேகளை கவனமாக அகற்றி குழாய் நீரில் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல், வேக்யூம் கிளனரை கொண்டு ஃபிரிட்ஜின் பின்புறம் படிந்திருக்கும் ஒட்டடை, தும்பு தூசுகளை வருடம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

ஃபிரிட்ஜை சுத்தம் செய்த பிறகு அறிந்த எலுமிச்சை அல்லது சிறிய கரித்துண்டை உள்ளே வைத்தால் அவை தேவையற்ற நாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும். அதை நேரத்தில் ஃப்ரீஸர் பகுதியையும் துடைத்து சுத்தம் செய்து பின்பு இயக்கலாம். எந்தப் பொருளையும் வாரம் ஒருமுறை சுத்தம் செய்யும் பொழுது, அதிக அழுக்குகள் சேராது, சுத்தம் செய்யும் வேலையும் எளிதாகி விடும்.

மிக்ஸி


எல்லோர் வீட்டிலும் உழைத்துப் பலவித கறைகளையும் தாங்கி நிற்கும் ஒரு போர்வீரன் என்றால் அது மிக்ஸிதான். மிக்ஸியின் வெளிப்புறக் கறைகளை பேக்கிங் பவுடர் மற்றும் வினிகர் கலந்த கரைகளைக் கொண்டு துடைத்து 15-லிருந்து 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு துடைக்கலாம்.



மிக்ஸி ஜாருக்குள் இருக்கும் கறைகளை நீக்க கல் உப்பை சிறிது போட்டு அடித்து பின்பு ஜாரைக்கழுவும் பொழுது அதில் ஒட்டியிருக்கும் தேவையற்ற துகள்கள் வந்துவிடும். அதேபோல் இஞ்சி பூண்டு விழுது அரைத்த பிறகு ஏற்படும் வாசத்தைப் போக்க எலுமிச்சை தோலை மிக்ஸியில் அரைத்து 15-20 நிமிடம் கழித்து அந்த ஜாரைக் கழுவும் பொழுது அதிலிருக்கும் தேவையற்ற நாற்றம் நீங்குவதோடு ஜாரும் பளிச்சென்றிருக்கும்.

மைக்ரோவேவ் அவன்


மைக்ரோவேவ் அவனைச் சுத்தப்படுத்துவதற்கு முன், அதன் கையேட்டில் குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் படித்து பின்னர் சுத்தம் செய்யத் தொடங்கவும். ஒரு கிண்ணம் நீரில் சிறிது வினிகரைக் கலந்து, அதை மைக்ரோ அவனில் 2 நிமிடங்கள் வைத்து சூடாக்கவும். அதை 15-20 நிமிடங்கள் அதனுள்ளேயே வைத்து மூடி விடவும். பின்பு ஒரு ஈரமான துணியால் அதனுள்ளே துடைக்கும் பொழுது அங்கிருக்கும் பிசுக்கு மற்றும் உணவுப் பொருள் படிவுகள் மிக எளிதாக நீங்குகின்றது.

வாஷிங் மெஷின்

ஒரு ஈரமான துணியால் வாஷிங் மெஷினின் உள்ளிருக்கும் சில்வர் டிரம்மை துடைப்பதால் அதில் படிந்திருக்கும் சோப்பு, அழுக்கு மற்றும் நூல்களானது அகற்றப்படுகின்றது. அதிலிருக்கும் ஃபில்டரை வாரம் ஒரு முறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை துணி துவைத்து முடிந்த பிறகும் வாஷிங்மெஷின் மூடியைத் திறந்து வைத்து அதன் ஈரப்பதம் காய்ந்த பிறகு மூடியை மூடலாம்.

ஏசி

ஏசி-யின் ஃபில்டரை அகற்றி பிரஷ் அல்லது வேக்யூம் கிளனர் உதவியால் அதில் படிந்திருக்கும் தூசுகளை அகற்றலாம். காயில்கள் மற்றும் பில்டர்களை சுத்தப்படுத்த ப்ளோயர் மற்றும் வேக்யூம் கிளனரானது மிகவும் உதவிகரமாக இருக்கும். வருடம் ஒருமுறை கட்டாயம் ஏசி மெக்கானிக்குகளை அழைத்து ஏசியைச் சர்வீஸ் செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் அதன் பயனை முழுமையாக அடைய முடியும்.

எலுமிச்சை, வினிகர், கல் உப்பு இவற்றைக் கொண்டு அதனுடன் பேக்கிங் சோடாவையும் கலந்து வீட்டிலேயே எப்பேர்ப்பட்ட கறைகளையும் அகற்றக்கூடிய லிக்விடை தயாரித்து வைத்துக் கொண்டு அவற்றை கேஸ் ஸ்டவ், பாத்ரூம் குழாய், பாத்ரூம் டைல்ஸ், அடுப்பு மேடை இன்னும் பலவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம்.
Tags:    

Similar News