செய்திகள்
பாபநாசம் அணை

பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு

Published On 2019-08-14 06:00 GMT   |   Update On 2019-08-14 06:00 GMT
நேற்று 100.10 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 2 அடி உயர்ந்து இன்று காலை 102.30 அடியாக உள்ளது.
நெல்லை:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்தது.

தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யா விட்டாலும் மலைப்பகுதியில் சாரல் அடித்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளுக்கும் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருகிறது.

பாபநாசம் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1294.21 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை நீர்மட்டம் நேற்று 100.10 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் மேலும் 2 அடி உயர்ந்து இன்று காலை 102.30 அடியாக உள்ளது.

அதே போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 128.21 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 60 அடியாகவும் உள்ளது. இதுபோல மற்ற சிறிய அணைகளிலும் நீர்மட்டம் நிரம்பும் நிலையில் உள்ளது. கொடுமுடியாறு, குண்டாறு அணைகள் மட்டும் தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

குற்றாலம் மலைப்பகுதியில் மிதமான அளவில் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவியில் இன்று காலை அதிக தண்ணீர் விழுந்ததால், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி போன்றவைகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


Tags:    

Similar News