ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ

விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ

Published On 2020-10-03 10:52 GMT   |   Update On 2020-10-03 10:52 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் பிரெஸ்ஸோ மாடல் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.


மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் பிரெஸ்ஸோ மாடல் இந்திய விற்பனையில் 75 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. மாருதியின் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் மாடலாக எஸ் பிரெஸ்ஸோ அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் இந்த மாடல் கணிசமான விற்பனையை பதிவு செய்து அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவதாக மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.



இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் ஏ2 பிரிவில் எஸ் பிரெஸ்ஸோ மாடல் மட்டும் 9 சதவீத பங்குகளை கொண்டிருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் எஸ் பிரெஸ்ஸோ மாடல் சிறப்பான முறையில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. 

மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 67 பிஹெச்பி பவர், 90 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News