உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

குமரியில் ஒரே நாளில் 431 பேருக்கு கொரோனா

Published On 2022-01-12 10:48 GMT   |   Update On 2022-01-12 10:48 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 431 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

ஆனால் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளது. நாகர்கோவில் நகரில் இந்த மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 10க்கு கீழ் இருந்து வந்தது. அதன்பிறகு பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு 50 ஆனது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக 200-ஐ கடந்தது. இன்று பாதிப்பு இரு மடங்கு உயர்ந்து 431 ஆக அதிகரித்துள்ளது. நாகர்கோவில் நகரில் மட்டும் 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். நாகர்கோவில் நகரை பொருத்தமட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்து வந்தது.

கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியது. தற்பொழுது நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே கொரோனா பாதிப்பு உள்ளது. 
இருளப்பபுரம், பொன்னப்ப நாடார் காலணி, கோட்டார், வடசேரி, தெலுங்கு செட்டி தெரு பகுதிகளில் கொத்துக் கொத்தாக பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். 

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் கடைகளில் வேலை பார்க்கும் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாதிக்கப்பட்ட வசித்து வரும் பகுதிகளில் மாநக ராட்சி ஊழியர்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு உள்ள வீடுகளில் மாநகராட்சி ஊழியர்கள் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியையும் மேற்கொண்டு உள்ளனர். 

நாகர்கோவிலில் நீதிபதி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.இதையடுத்து கோர்ட்டு ஊழியர்களுக்கு நடத்தப் பட்ட சோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அகஸ்தீஸ்வரம், முஞ்சிறை, மேல்புறம், ராஜாக் கமங்கலம், தக்கலை யூனியன் பகுதிகளிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. கிராமப்புறங்களில் பலரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். 

பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் 50 க்கும் மேற்பட் டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் ஏற்கனவே  400-க்கு மேற்பட்ட படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

கோணம் பாலிடெக்னிக் கல்லூரி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு இடங்களில்கொரோனா சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளது.கொரோனாவை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள் தேவை இன்றி வெளியே சுற்றி திரிவதை தவிர்க்க வேண்டும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். கடை நிர்வாகத்தினர் அதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். அரசின் வழி காட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News