லைஃப்ஸ்டைல்
கேரட் வேர்க்கடலை சட்னி

கேரட் வேர்க்கடலை சட்னி

Published On 2020-07-15 05:50 GMT   |   Update On 2020-07-15 05:50 GMT
கேரட், வேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இவை இரண்டையும் வைத்து சத்தான சுவையான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

துண்டுகளாக நறுக்கிய கேரட் - ஒரு கப்
வேர்க்கடலை - கால் கப்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :

கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை



செய்முறை:

வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.

கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

கால் டீஸ்பூன் எண்ணெயில் கேரட்டை வதக்கி வைத்துக் கொள்ளவும்.

மிக்சியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாவை போட்டு நன்றாக பொடித்த பின்னர் வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.

கடைசியாக பெருங்காயத்தூள் வதக்கிய கேரட், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில் துவையலாக அரைத்தெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி நன்றாக கலந்து பரிமாறவும்.

இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News