ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் அருகில் புதிய மண்டபம் கட்ட பூமி பூஜை

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் அருகில் புதிய மண்டபம் கட்ட பூமி பூஜை

Published On 2020-12-11 05:43 GMT   |   Update On 2020-12-11 05:43 GMT
ஸ்ரீகாளஹஸ்தி ராஜகோபுரம் கட்டுமானத்தின் போது அகற்றப்பட்ட தேவாங்குல மண்டபத்தை மீண்டும் அதே இடத்தில் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் பழைய ராஜகோபுரம் 2015-ம் ஆண்டு மே மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பின்னர் புதிய ராஜகோபுரம் கட்டும்போது, அதன் அருகில் கட்டுமானப் பணிக்கு இடையூறாக இருந்த தேவாங்குல மண்டபத்தை அகற்றினர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உற்சவர்கள் வீதி உலா வரும்போது, வாகனச் சேவையை தேவாங்குல மண்டபத்தில் நிறுத்தி சிறப்புப்பூஜைகள் செய்து, பின்னர் 4 மாடவீதிகளில் உலா வருவது வழக்கம்.

புதிய ராஜகோபுரம் கட்டுமானத்தின் போது அகற்றப்பட்ட தேவாங்குல மண்டபத்தை மீண்டும் அதே இடத்தில் கட்ட நேற்று பூமி பூஜை போடப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி பங்கேற்று தேவாங்குல மண்டபம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி வைத்து, புதிய மண்டபத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். பூமி பூஜையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்திராஜு மற்றும் அதிகாரிகள், தேவாங்குல சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News