செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

Published On 2021-07-20 08:31 GMT   |   Update On 2021-07-20 08:31 GMT
22-ந் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.
சென்னை:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.



22-ந் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.

23, 24-ந் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 23-ந் தேதி வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழல், அம்பத்தூர் தலா 4 செ.மீ. பெரம்பூர் 3 செ.மீ, வால்பாறை, சென்னை நுங்கம்பாக்கம் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.


Tags:    

Similar News