செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

கரூர்-குளித்தலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-22 08:54 GMT   |   Update On 2021-01-22 08:54 GMT
கரூர் அருகே விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:

கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அக்னி அகரமுத்து, மாவட்ட செய்தி தொடர்பாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டிப்பது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேகோரிக்கையை வலியுறுத்தி குளித்தலை காந்தி சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News