செய்திகள்
மு.க.ஸ்டாலின்

கருணாநிதி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுவோம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2021-05-30 02:19 GMT   |   Update On 2021-05-30 02:19 GMT
ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் பிறந்தநாள் நிகழ்வுகளை நடத்திட வேண்டாம் என தொண்டர்களை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:

முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள் விழா ஜூன் 3ஆம் தேதி  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நம் உள்ளம் நிறைந்த கருணாநிதி பிறந்தநாளை தொண்டர்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும். ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் பிறந்தநாள் நிகழ்வுகளை நடத்திட வேண்டாம். 



மக்களின் உயிரை காப்பதே கருணாநிதி பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்ப்பதாகும். கருணாநிதி பிறந்தநாளில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கிடுங்கள்.

பேரிடர் கால நெறிமுறைகளை கடைபிடித்து கருணாநிதி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுவோம். 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
Tags:    

Similar News