ஆன்மிகம்
ஆடிப்பெருக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்

ஆடிப்பெருக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்

Published On 2020-08-03 03:24 GMT   |   Update On 2020-08-03 03:24 GMT
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள் அடைக்கப்பட்டு இருப்பதால் அம்மன் கோவில்கள் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு படைத்தும் அம்மனை மனமுருக வேண்டிக் கொண்டனர்.
சென்னை :

ஆடி மாதத்தின் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று நீர்நிலைகளில் மக்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள். அதேபோல அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.

ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள் அடைக்கப்பட்டு இருப்பதால் மக்கள் தங்களது வழக்கமான பிரார்த்தனைகளில் ஈடுபட முடியவில்லை. என்றாலும் அம்மன் கோவில்கள் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு படைத்தும் அம்மனை மனமுருக வேண்டிக் கொண்டனர். அதேபோல கோவில் வாசல்கள் முன்பு கூழ் வார்த்து அப்பகுதி மக்களுக்கு அதை வினியோகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
Tags:    

Similar News