செய்திகள்
Paytm செயலி

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கம்: வாடிக்கையாளர்கள் பணம்?

Published On 2020-09-18 10:11 GMT   |   Update On 2020-09-18 10:11 GMT
விதிமீறல் காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பணம் என்ன ஆகும்? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 500 ரூபாய் மற்றம் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது பிரபலம் ஆனது Paytm செயலி. Android ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்து லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வந்தனர். இந்த செயலி பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விளையாட்டு சூதாட்டம் தொடர்பான விதிமீறல் காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து Paytm தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. Paytm செயலியை டவுன்லோடு செய்ய முடியாது. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் திரும்பக் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக இருக்கும். விரைவில் மீண்டும் பிளே ஸ்டோரில் Paytm பயன்பாட்டு வரும் Paytm நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News