உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

இரவு நேர ஊரடங்கை மீறியதாக 9 வழக்குகள் பதிவு

Published On 2022-01-11 10:54 GMT   |   Update On 2022-01-11 10:54 GMT
ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 9 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது, 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 9 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது, 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியது.

மேலும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருவதால்  அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இரவுநேர ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை  கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள 14 முக்கிய சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

இரவுநேர ஊரடங்கு என்றாலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் நேற்று இரவு வழக்கம்போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாநகர் பகுதியில் நேற்று தடையை மீறி சுற்றியதால் 9 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.

மேலும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தெரிவித்தார்.
Tags:    

Similar News