உள்ளூர் செய்திகள்
வத்திராயிருப்பு அர்ச்சுனா நதியில் சேது நாராயண பெருமாள் சுவாமி கள்ளழகர் வேடமிட்டு ஆற்றில் இறங்கினார்.

சேதுநாராயணபெருமாள் ஆற்றில் இறங்கினார்

Published On 2022-04-17 09:21 GMT   |   Update On 2022-04-17 09:21 GMT
சேதுநாராயணபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு ஆற்றில் இறங்கினார்
வத்திராயிருப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் சேதுநாராயண பெருமாள் சுவாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது.

பின்னர் சேது நாராயண பெருமாள் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகளும் நடந்தன. அதன் பின்னர் உற்சவர் சொத்து நாராயண பெருமாள் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் சேதுநாராயண பெருமாள் சுவாமி கள்ளழகர் வேடமணிந்து ஆற்றில் இறங்கும் வைபவம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று  நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று சேதுநாராயண பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி வத்திராயிருப்பில் உள்ள அர்ச்சுனா நதி ஆற்றில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கலாராணி மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News