செய்திகள்
சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்

நெல்வாய் ஊராட்சியில் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்

Published On 2020-11-18 10:24 GMT   |   Update On 2020-11-18 10:24 GMT
மழை நீர் சாக்கடை போல் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் நோய் பரவும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெமிலி:

பனப்பாக்கம் அருகே நெல்வாய் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதென்னல் கிராமத்தில் சுமார் 150 மீட்டர் நீளமுள்ள பெருமாள் கோவில் தெரு சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மூன்று கட்டங்களாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு பகுதி மேடாகவும் மற்றொரு பகுதி பள்ளமாகவும் காட்சி அளிக்கிறது. மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாததாலும் சிமெண்டு சாலைகள் சேதமடைந்து மழைநீர் குளம் போல் தேங்கி சாக்கடையாக மாறுகிறது.

எனவே மழைநீர் வடிந்து செல்லும் வகையில் புதிதாக சாலை அமைத்துத் தருமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரசு துறைகளான வட்டார வளர்ச்சி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவற்றில் புகார் அளித்தும் கடந்த ஒரு வருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய கொரொனா நோய்த்தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில், மழை நீர் சாக்கடை போல் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் நோய் பரவும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News