தொழில்நுட்பச் செய்திகள்
டிஜோ இயர்போன்ஸ்

10 நிமிட சார்ஜில் 2 மணி நேரம் பிளேபேக் நேரம் தரும் டிஜோ ப்ளூடூத் இயர்போன்

Published On 2022-02-18 12:11 GMT   |   Update On 2022-02-18 12:11 GMT
இந்த இயர்போன் ஒரு சார்ஜிற்கு 18 மணி நேரம் பேட்டரி லைஃபை வழங்குகிறது.
ரியல்மி நிறுவனத்தின் பார்னர் பிராண்டான டிஜோ புதிய ப்ளூடூத் இயர்போன்களை வரும் பிப்ரவரி 21-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.

நெக்பேண்ட் ஸ்டலில் வெளியாகும் இந்த இயர்போனுக்கு டிஜோ ஒயர்லெஸ் பவர் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இயர்போனில் 11.2m ஆடியோ டிரைவர், பேஸ் பூஸ்ட் பிளஸ் அலாகரித்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இரண்டு இயர்பட்களில் காந்தம் தரப்பட்டுள்ளன. இதன்மூலம் இயர்பட்களை இணைத்தால் ஹெட்போன்ஸ் ஆஃப் ஆகிவிடும். இரண்டு இயர்பட்களையும் பிரித்தால் ஆன் ஆகிவிடும்.



இந்த இயர்போன் 5.2 ப்ளூடூத் கொண்டுள்ளது. மேலும் இதில் தரப்பட்டுள்ள கேம் மோடில் 88ms லேடன்ஸி வரை அட்ஜஸ்ட் செய்ய முடியும். மேலும் இதில் உள்ள நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் மூலம் நாம் போன் பேசும்போதும் மிகத் தெளிவான சத்தத்தை கேட்க முடியும்.

இந்த இயர்போனை ரியல்மி லிங்க் செயலியுடன் இணைத்துகொள்ள முடியும். இந்த இயர்போன் முழுதாக சார்ஜ் ஏறுவதற்கு 2 மணி நேரம் ஆகும். 10  நிமிட சார்ஜில் 2 மணி நேரம் பிளேபேக் நேரத்தை வழங்கும்.

மேலும் இந்த இயர்போன் ஒரு சார்ஜிற்கு 18 மணி நேரம் பேட்டரி லைஃபை வழங்குகிறது.

இதன் விலை ரூ.2,499-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News