செய்திகள்
தொலைபேசி

கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

Published On 2021-02-22 03:43 GMT   |   Update On 2021-02-22 03:43 GMT
பொதுமக்கள் கட்டணமில்லா பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 1070 மற்றும் 1077 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் புகார்கள், குறைகளை தெரிவிக்கலாம்.
புதுச்சேரி:

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் மலர்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் நேற்று அதிகாலை முதல் எதிர்பாராதவிதமாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க வருவாய்த்துறையின் கீழ் இயங்கும் அவசரகால செயல் மையம் முழுவீச்சில் செயல்பட்டது. அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு அதிகாரிகள் களத்திற்கு சென்று மக்களின் தேவையான உதவிகள் செய்தனர்.

அதன்படி தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் தங்குவதற்காக உடனடியாக 15 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப கூடுதல் முகாம்கள் திறக்கப்படும். வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதியில் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள அரசுத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் கட்டணமில்லா பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 1070 மற்றும் 1077 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் புகார்கள், குறைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News