ஆன்மிகம்
சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சிரார்தம் செய்யலாமா?

சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சிரார்தம் செய்யலாமா?

Published On 2020-09-17 07:10 GMT   |   Update On 2020-09-17 07:10 GMT
தாய்-தகப்பனாருக்கு திதி கொடுக்காமல் இறைவனை வழிபடுவதால் எந்த பலனும் ஏற்படாது. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சிரார்தம் செய்யலாமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
விரதங்கள் என்பது நாம் நலமுடன் இருக்கவும், பகவானை வேண்டி இருக்கும் சுய நியமனமாகும். இந்த காலத்தில் தாய், தகப்பனார் திதி வருமேயானால் தவறாமல் செய்ய வேண்டும்.

தாய்-தகப்பனாருக்கு திதி கொடுக்காமல் இறைவனை வழிபடுவதால் எந்த பலனும் ஏற்படாது. நித்யானுஷ்டானத்தில் தினமும் முன்னோர்களுக்கு திதி செய்ய வேண்டும். வாழ்கையில் மிகமுக்கிய சுபநிகழ்வான திருமணத்தில் கூட தெவசம் “நாந்தி” என்று செய்யப்படுகிறது. தெவசம் செய்வது நமது கடமை, விரதம் என்பது விருப்பம்.

இறப்பு தீட்டு இருக்கும் காலத்தில்கூட ஏகாதசி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்கிறது ஸ்மருதிகள். முன்னோர் வழிபாட்டினை எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாது என்கிறது சாஸ்திரங்கள்.

சபரிமலைக்கு விரதம் இருப்பவர்கள் விரதகாலத்தில் திதி கொடுப்பதில் எந்த தடையும் இல்லை.
Tags:    

Similar News