உள்ளூர் செய்திகள்
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு கலெக்டர் முரளிதரன் தலைமையில் மாலை அண

பென்னிகுக் பிறந்த நாள் விழாவுக்கு கட்டுப்பாடு

Published On 2022-01-15 09:26 GMT   |   Update On 2022-01-15 09:26 GMT
பென்னிகுக் பிறந்த நாளில் பொதுமக்கள் பொங்கல் வைக்க தடை விதிக்கப்பட்டது
உத்தமபாளையம்:

முல்லை பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த அணை உருவாக காரணமாக இருந்த இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிக்குக் பிறந்தநாள் ஜனவரி 15ம் தேதி ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் முல்லை பெரியாற்றின் கரையோரப் பகுதியில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

மேலும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பொங்கல் வைக்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் முரளிதரன் மற்றும் எம்.எல்.ஏக்கள் பென்னிக்குக் மணிமண்டபம் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News