செய்திகள்
கைது

மீன்சுருட்டி அருகே மது விற்றவர் கைது

Published On 2021-04-04 11:37 GMT   |   Update On 2021-04-04 11:37 GMT
மீன்சுருட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சோதனை நடத்தியதில், மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகேசன்(வயது 42), வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அழகேசனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News