ஆன்மிகம்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

Published On 2020-12-08 05:41 GMT   |   Update On 2020-12-08 05:41 GMT
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமரவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெறும். 

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக கார்த்திகை மாத 4-வது சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கலசங்களிலும், சங்குகளிலும் புனித நீர் நிரப்பி பூஜைகள் செய்யப்பட்டு சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் உபயதாரர்கள் மற்றும் குறைந்த அளவில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News