ஆட்டோமொபைல்

இந்தியாவில் பஜாஜ் பல்சர் 180எஃப் நியான் எடிஷன் மோட்டார் சைக்கிள் அறிமுகம்

Published On 2019-03-10 13:15 GMT   |   Update On 2019-03-10 13:15 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் பல்சர் 180எஃப் நியான் எடிஷன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #Pulsar180FNeonEdition
இந்திய மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் புத்தம் புதிய பல்சர் 180எஃப் நியான் எடிஷன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய பல்சர் 180 விலை ரூ.87,450 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் 180எஃப் வடிவமைப்பு சக்திவாய்ந்த 220எஃப் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் 180எஃப் நியான் எடிஷன் தற்போதைய பல்சர் 180 மாடலில் வழங்கப்பட்டிருக்கும் என்ஜினுடன் வருகிறது. அதாவது
புதிய 180 மாடலிலும் 178.6சிசி ஏர்-கூல்டு, DTS-i என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 17 பி.ஹெச்.பி. பவர் @8500 ஆர்.பி.எம்., 14 என்.எம். டார்க் @6500 ஆர்.பி.எம். வழங்குகிறது.

பல்சர் 180எஃப் மாடலின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 260எம்.எம்., பின்புறம் 230 எம்.எம். அளவில் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கள் ஏ.பி.எஸ். வசதியுடன் வருகிறது. சஸ்பென்ஷனை பொருத்தவரை பல்சர் 180எஃப் நியான் எடிஷனின் முன்புறம் கன்வென்ஷனல் ஃபோர்க் மற்றும் பின்புறம் கியாஸ்-சார்ஜ் செய்யப்பட்ட ட்வின் ஷாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பை பொருத்தவரை பல்சர் 180எஃப் மாடல் 220எஃப் போன்றே காட்சியளிக்கிறது. பைக்கின் முன்புறம் சிறிய ஃபேரிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆரஞ்சு நிற ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளது. இவற்றை பைக்கின் பக்கவாட்டுகளிலும் பார்க்க முடியும்.

பல்சர் மற்றும் 180 பேட்ஜ்கள் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டுகளில் காணப்படுகிறது. இதன் ஹெட்லேம்ப் வடிவமைப்பு பெரிய மாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப் வடிவமைப்புடன் புதிய பல்சர் 180எஃப் லைட்டிங் அம்சமும் 220எஃப் மாடலில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனம் தனது மேம்பட்ட ஃபிளாக்‌ஷிப் மோட்டார் சைக்கிளான 2019 டாமினர் 400 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2019 பஜாஜ் டாமினர் 400 அதிகளவு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளில் 373சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது தற்போதைய மாடலை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News