செய்திகள்
கோப்புப்படம்

திருமண விழாவில் நடனம் ஆடிய சகோதரர்களுக்கு கத்திக்குத்து- ஒருவர் பலி

Published On 2019-11-19 10:43 GMT   |   Update On 2019-11-19 10:43 GMT
குஜராத்தில் திருமண விழாவில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட விவாதத்தில் சகோதரர்கள் இருவர் கத்தியால் குத்தப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார்.
சூரத்:

குஜராத் மாநிலத்தின் சூரத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் ரவி என்ற சகோதரர்கள், சூரத் நகரில் உள்ள ராண்டர் நகரில் நேற்று இரவு நடைபெற்ற நண்பனின் தங்கையின் திருமண விழாவிற்கு சென்றனர். இருவரும் மற்ற நண்பர்களுடன் திருமண விழாவில் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

அப்போது விழாவிற்கு வந்த மற்றொரு நபர் விஜய் மற்றும் ரவி நடனம் ஆடுவதை விரும்பாமல் அவர்களை தடுத்தார். இதையடுத்து திருமண விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடையே ஏற்பட்ட விவாதத்தில் அந்த நபர் விஜயையும் அவரது சகோதரரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இருவரும் இரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மார்பில் கத்தியால் குத்தப்பட்ட விஜய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காலில் பலத்த காயமடைந்த ரவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய நபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News