செய்திகள்
கோப்புபடம்

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.1,87,750 மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரனை

Published On 2021-10-16 11:40 GMT   |   Update On 2021-10-16 11:40 GMT
புதுக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரை ஏமாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் அகஸ்டின்ராஜ்(55). இவர் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தற்போது ஓய்வில் உள்ளார்.

இவருக்கு பேஸ்புக்கில் லண்டனை சேர்ந்த ரூத் மங்கார என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் லண்டனிலிருந்து அவர், பரிசு பொருட்கள் அனுப்பியுள்ளதாக அகஸ்டின்ராஜியிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து டெல்லியிலுள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்திலிருந்து பேசுகிறோம் என தெரியாத நபர்கள் அகஸ்டின்ராஜியிடம் போன் மூலம் பேசியுள்ளனர்.

அவ்போது அவர்கள், பரிசு பொருள் உள்ளது அதை வெளியே கொண்டு வர பணம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய அகஸ்டின்ராஜ் உடனடியாக அகஸ்டின்ராஜ் வங்கியின் டெல்லி கிளைக்கு ரூ38 ஆயிரமும், அதனை தொடர்ந்து ரூ.99,750ம், இரண்டு முறை செலுத்தியதுடன், உத்தரபிரேதசம் கிளைக்கு ரூ.50 ஆயிரத்தையும் செலுத்தியுள்ளார்.

ஆக மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 750 ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால் எந்த பொருளும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அகஸ்டின்ராஜ் புதுக்கோட்டை சைபர் கிரைம் போலிசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரை ஏமாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News