செய்திகள்
சந்தனம் மரம்.

பல லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

Published On 2021-07-20 11:42 GMT   |   Update On 2021-07-20 11:42 GMT
ஊத்துக்குளி-குன்னத்தூர் சாலையோரம் நடப்பட்ட 2 சந்தன மரக்கன்றுகள் 15 அடி உயரம் வளர்ந்திருந்தது.
திருப்பூர்:

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையோரம் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஊத்துக்குளி-குன்னத்தூர் சாலையோரம் நடப்பட்ட 2 சந்தன மரக்கன்றுகள் 15 அடி உயரம் வளர்ந்திருந்தது. 

அதனை வனத்துறையினர் பராமரித்து வந்த நிலையில், மர்மநபர்கள் சிலர் வெட்டி கடத்தி சென்று விட்டனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக இது குறித்து அப்பகுதி வி.ஏ.ஓ.ரத்தினகுமாரிடம் புகார் தெரிவித்தனர். 

அவர் இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சந்தனமரங்களை வெட்டி கடத்தி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும்
Tags:    

Similar News