செய்திகள்
கைது

முதியோர்களை குறி வைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2020-10-24 06:57 GMT   |   Update On 2020-10-24 06:57 GMT
முதியோர்களை குறி வைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் மாலை நேரத்தில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் முதியோர்களை குறித்து, அவர்கள் மோட்டார்சைக்கிளில் செல்லும்போது, பின்தொடர்ந்து சென்று திசை திருப்பி, அவர்களிடம் இருந்து சிலர் செல்போனை பறித்துச் செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து, செல்போன் திருடர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகப்படும் படியாக வந்த 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் பிடித்து வாணியம்பாடி தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இருவரும் ஆம்பூரை அடுத்த மேல்மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 23), பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (20) எனத் தெரிய வந்தது. இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிள்களில் செல்லும் முதியோர்களை குறி வைத்து அவர்களிடம் செல்போனை பறித்துச் சென்றதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News