செய்திகள்
அசாம் சட்டசபை தேர்தல்

அசாமில் நாளை இறுதி கட்ட தேர்தல்- 40 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு

Published On 2021-04-05 09:43 GMT   |   Update On 2021-04-05 09:43 GMT
அசாமில் நாளை இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இத்துடன் அசாம் மாநில தேர்தல் முடிவுக்கு வந்துவிடும்.
கவுகாத்தி:

அசாமில் 3 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி ஏற்கனவே 2 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.

அசாமில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 126. அதில் முதல் கட்டமாக கடந்த 27-ந் தேதி 47 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 2-வது கட்டமாக கடந்த 1-ந் தேதி 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

நாளை இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இத்துடன் அசாம் மாநில தேர்தல் முடிவுக்கு வந்துவிடும்.

அசாமில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி உள்ளூர் கட்சிகள் சிலவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 10 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த இரு கூட்டணிகளுக்கும் ஆட்சியை பிடிப்பது யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

நாளைய தேர்தலில் 78 லட்சத்து 75 ஆயிரத்து 468 பேர் வாக்களிக்கிறார்கள். அசாம் நிதி மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, மாநில பாரதிய ஜனதா தலைவர் ரஞ்ஜித் குமார் தாஸ் ஆகியோர் தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது.

நாளை தேர்தல் நடைபெறும் சில தொகுதிகள் மிக பதட்டம் நிறைந்தவையாக கருதப்படுகிறது. பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News