இந்தியா
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா நிலவரம்- 558 நாட்களில் இல்லாத அளவு குறைந்த தினசரி பாதிப்பு

Published On 2021-12-07 04:36 GMT   |   Update On 2021-12-07 04:36 GMT
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 168 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 220 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,73,757 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 6 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் 7 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,822 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 29-ந்தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 6,990 ஆக இருந்தது. அதன் பிறகு பாதிப்பு சற்று உயர்ந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் 7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு இந்த அளவில் குறைந்திருப்பது கடந்த 558 நாட்களில் முதல் முறை ஆகும்.

மொத்த பாதிப்பு 3 கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 168 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 220 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,73,757 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 10,004 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 79 ஆயிரத்து 612 ஆக உயர்ந்தது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த 554 நாட்களில் இல்லாத அளவில் 95,014 ஆக குறைந்துள்ளது.



நாடு முழுவதும் நேற்று 79,39,038 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 128 கோடியே 76 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி 64.94 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 10,79,384 மாதிரிகள் அடங்கும்.


Tags:    

Similar News