செய்திகள்
ரேசன் அரிசி

ஆந்திராவில் இருந்து நாகர்கோவிலுக்கு 2,650 டன் ரேஷன் அரிசி வந்தது

Published On 2020-06-30 14:55 GMT   |   Update On 2020-06-30 14:55 GMT
ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நாகர்கோவிலுக்கு 2650 டன் ரேஷன் அரிசி வந்தது.
நாகர்கோவில்:

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து அமலில் உள்ளது. இதையொட்டி ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரிசியின் அளவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

எனவே குமரி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி தட்டுப்பாடின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில்களில் ரேஷன் அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2,650 டன் ரேஷன் அரிசி நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று ரெயிலில் இருந்து அரிசி மூடைகளை இறக்கி லாரிகள் மூலம் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. குடோன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அரிசியை தங்கு தடையின்றி அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News