செய்திகள்
சிரியா தாக்குதல் (கோப்புப்படம்)

சிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 8 குழந்தைகள் பலி

Published On 2019-12-05 06:59 GMT   |   Update On 2019-12-05 06:59 GMT
சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 8 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்:

சிரியாவில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்குள்ள குர்து போராளிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை துருக்கி மற்றும் ரஷிய படைகள் கைப்பற்றின. ரஷிய ராணுவ போலீசார் அப்பகுதிகளில் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சிரியாவின் அலெப்போ மாகாண பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர் என ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

‘அலெப்போ மாகாணத்தில்  உள்ள டால் ரிபாட் நகரின் கல்ஜிப்ரின் கிராமத்தில் பயங்கரவாதிகள் மோர்ட்டார் குண்டுகள் வீசி நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 7 பேர் குழந்தைகள். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இட்லிப் மாகாணத்தின் பாதுகாப்பு மண்டலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 40 முறை பயங்கரவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனர் என ராணுவ ஜெனரல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News