ஆட்டோமொபைல்
2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-02-11 11:14 GMT   |   Update On 2021-02-11 11:14 GMT
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2021 ஹிமாலயன் மாடல் விலை ரூ. 2.01 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் 2021 ஹிமாலயன் மாடல் மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. புதிய 2021 ஹிமாலயன் மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு அந்நிறுவனத்தின் வலைதளத்திலும் மேற்கொள்ள முடியும்.

2021 ஹிமாலயன் மாடலின் வினியோகம் விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மேம்பட்ட சீட்கள், நீண்ட தூர பயணத்தின் போது அதிக சவுகரியம் வழங்க ஏதுவான மாற்றங்களை கொண்டிருக்கின்றன.



காஸ்மெடிக் அடிப்படையில் 2021 ஹிமாலயன் மாடல் பைன் கிரீன், கிரானைட் பிளாக் (டூயல் டோன் மேட் மற்றும் கிளாஸ் பிளாக்) மற்றும் மிரேஜ் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிராவல் கிரே, ராக் ரெட் மற்றும் லேக் புளூ நிறங்களிலும் கிடைக்கிறது.

2021 ஹிமாலயன் மாடலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சம் கொண்டிருக்கிறது. புதிய டன்-பை-டன் நேவிகேஷன் பாட் மோட்டார்சைக்கிளின் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் அருகில் பொருத்தப்பட்டு இருக்கிறது. 

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலில் 411சிசி சிங்கில் சிலிண்டர் SOHC ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 24.3 பிஹெச்பி பவர், 32 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News