செய்திகள்
அமைச்சர் கேசி வீரமணி

திருப்பத்தூரில் வேதிஷ் மொபைல்ஸ், கம்ப்யூட்டர் ஷோரூம்- அமைச்சர் கேசி வீரமணி திறந்து வைத்தார்

Published On 2021-01-10 12:50 GMT   |   Update On 2021-01-10 12:50 GMT
திருப்பத்தூரில் வேதிஷ் மொபைல்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் ஷோரூமை அமைச்சர் கேசி வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூரில், கிருஷ்ணகிரி மெயின் ரோடு ஸ்ரீ கிருஷ்ணா சில்க்ஸ் அருகில் வேதிஷ் மொபைல்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் 2-வது பிரம்மாண்டமான குளிரூட்டப்பட்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வேதிஷ் மொபைல்ஸ் மேலாண்மை இயக்குனர் எஸ்.ஆர்.ரவி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.நாகேந்திரன் வரவேற்றார்.

புதிய ஷோரூமை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கலெக்டர் சிவன்அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், விஜயலட்சுமி ரவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். முதல் விற்பனையை மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.மணியன் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷ், அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் டாக்டர் லீலாசுப்ரமணியம், கூட்டுறவு சங்க தலைவர் கே.எம்.சுப்ரமணியம், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் என்.திருப்பதி, கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைவர் சி.செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பி.கே.சிவாஜி. சி.எம்.மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கோபிநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேதிஸ் நிர்வாக இயக்குனர் கூறுகையில் வேதிஷ் மொபைல்ஸ் திருப்பத்தூரில் இரண்டாவது மிகப்பெரிய ஷோரூமை திறந்துள்ளது. பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிக குறைந்த விலையில் அனைத்து செல்போன்கள், புளு டூத், ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் ஹெட்போன்கள், சார்ஜர்கள் சார்ஜர் வயர்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், டி.வி.கள், குறைந்த விலையில் கிடைக்கும். திறப்பு விழா சலுகையாக மொபைல் வாங்குபவர்களுக்கு டி.வி. இலவசமாக வழங்கப்படுகிறது என்று கூறினார்.
Tags:    

Similar News