செய்திகள்
நைஜீரியா ராணுவம்

நைஜிரியாவில் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு - 21 பேர் பலி

Published On 2020-02-13 08:40 GMT   |   Update On 2020-02-13 08:40 GMT
நைஜீரியா நாட்டில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அபுஜா:

ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்திருக்கும் எகிப்து, மாலி, சாட், பர்கினோ பசோ, நைஜீரியா போன்ற சில நாடுகளில் போகோ ஹராம், அல்கொய்தா, ஐ.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள், போலீசார் என பலர் உயிரிழந்துள்ளனர். ராணுவமும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் உள்ள பகாலி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகினர்.

கடுனா மாநிலத்தின் ஃபிகா மாவட்டத்தில் உள்ள பகாலி கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 100 பயங்கரவாதிகள் மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் நுழைந்தனர். பின்னர் பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் கிராம மக்கள் 21 பேர் பலியாகினர். 

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது என போலீசார் தெரிவித்தனர். 
Tags:    

Similar News