வழிபாடு
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டு விழா

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டு விழா

Published On 2022-04-16 03:24 GMT   |   Update On 2022-04-16 03:24 GMT
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி தங்க ஆபரணங்கள், மலர் மாலைகளுடன் கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர் எழுந்தருளினர்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சாமி நாற்காலி, பல்லக்கு வாகனங்களில் எழுந்தருளல், கதகளி போன்றவை நடந்தது. நேற்று முன்தினம் சாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் நடந்தது.

விழாவில் நேற்று ஆராட்டு விழா நடந்தது. இதையொட்டி இரவில் தங்க ஆபரணங்கள், மலர் மாலைகளுடன் கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கிழக்கு வாசல் வழியாக ஆராட்டு ஊர்வலம் தொடங்கியது.  

திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடை வாளுடன் முன் செல்ல மேளதாளம் முழங்க சாமி ஊர்வலம் புறப்பட்டது. அப்போது துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் மரியாதை செய்தனர்.

மேலும் ஊர்வலத்துக்கு வழிநெடுக பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். ஊர்வலம் கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக மூவாற்றுமுகம் ஆற்றை அடைந்தது. அங்கு ஆராட்டு விழா நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News