செய்திகள்
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி

அரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் - மம்தா பானர்ஜி அழைப்பு

Published On 2019-09-15 21:37 GMT   |   Update On 2019-09-15 21:37 GMT
நாட்டில் சூப்பர் அவசரநிலை நிலவுகிறது. அரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் என்று மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
கொல்கத்தா:

ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந் தேதி, சர்வதேச ஜனநாயக தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சர்வதேச ஜனநாயக தினத்தில், நமது நாடு எதன் அடிப்படையில் நிறுவப்பட்டதோ, அந்த ஜனநாயக கோட்பாடுகளை பாதுகாக்க நாம் மீண்டும் ஒருமுறை உறுதி ஏற்றுக்கொள்வோம்.

நமது ஜனநாயகம், மக்களின் உரிமைகளுக்கும், சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. சூப்பர் அவசரநிலை நிலவும் இந்த காலத்தில், அந்த உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

குடிமக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்று எல்லா அரசுகளையும் வற்புறுத்த இந்த நாளை ஒரு வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது மக்களுக்கானது, ஜனநாயகம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது, எல்லோருக்கும் சம அந்தஸ்து அளிக்கக்கூடியது என்று நினைவுபடுத்த இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வோம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Tags:    

Similar News