ஆன்மிகம்
பழையனூர் சுந்தரமகாலிங்கம் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

பழையனூர் சுந்தர மகாலிங்கம் கோவில் தேரோட்டம்

Published On 2021-03-15 05:52 GMT   |   Update On 2021-03-15 05:52 GMT
பழையனூர் சுந்தர மகாலிங்கம் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை மாவட்டம் பழையனூர் கிராமத்தில் அங்காளஈஸ்வரி உடனமர் சுந்தரமகாலிங்கம், சந்தன கருப்பண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா 5 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 11-ந்தேதி இரவு கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை ெதாடர்ந்து தினமும் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சுந்தரமகாலிங்கம் பிரியாவிடையுடன் காளை வாகனத்திலும், அங்காளஈஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மனும் எழுந்தருளினார்கள். அதன்பிறகு மாலை 4 மணியளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் உலா வந்தது பார்க்க கண்கொள்ள காட்சியாக இருந்தது. மாலை 6.30 மணிக்கு திருத்தேர் நிலையை வந்தடைந்தது.இன்று (திங்கட்கிழமை)இரவு தேர் தடம் பார்த்தல், பூஜை பெட்டி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
Tags:    

Similar News