செய்திகள்
கேன் வில்லியம்சன்

டெஸ்ட் தரவரிசை: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடம்- ஸ்மித், கோலியை பின்னுக்கு தள்ளினார்

Published On 2020-12-31 10:04 GMT   |   Update On 2020-12-31 10:04 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரட்டை சதமும், பாகிஸ்தானுக்கு எதிராக சதமும் விளாசிய கேன் வில்லியம்சன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்ரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித் முதல் இடத்தில் இருந்தார். இந்திய அணி கேப்டன் விரா் கோலி 2-வது இடத்திலும், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 3-வது இடத்திலும் இருந்தனர்.

கேன் வில்லியம்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதமும், பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் சதமும் விளாசினார். அதேசமயம் ஸ்மித் இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்டுகளில் 1, 1 (நாட்அவுட்), 0, 8 என நான்கு இன்னிங்சில் 10 ரன்களே அடித்தார். விராட் கோலி அடிலெய்டு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 74 ரன்கள் அடித்தார். 2-வது இன்னிங்சில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனால் 3-வது இடத்தில் இருந்து கேன் வில்லியம்சன் 890 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். 4-வது இடத்தில் லாபஸ்சேன் உள்ளார். மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த ரகானே 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
Tags:    

Similar News