ஆட்டோமொபைல்
சீன ஆட்டோமொபைல் ஆலை - கோப்புப்படம்

சீனாவில் இருந்து பேருந்து, கார் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை

Published On 2019-07-25 09:23 GMT   |   Update On 2019-07-25 09:23 GMT
சீன நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பேருந்துகள் மற்றும் கார் இறக்குமதிக்கு அமெரிக்க அரசு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சீனாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதுதவிர ஹூவாய் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்கவும் முடிவு செய்தது.

இருநாடுகளிடையே தகவல்திருட்டு விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேருந்துகள் மற்றும் குறிப்பிட்ட சில கார்களைத் தடை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 



தொலைதொடர்பு சாதனங்களை போன்று பேருந்து மற்றும் கார் போன்ற சில வாகனங்களிலும் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்திருக்கின்றன. இதுதவிர வெளிநாட்டு நிறுவனங்களுடன் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வருவதாகவும், அமெரிக்க ஆலைகள் மூலம் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News