விளையாட்டு
ரவி சாஸ்திரியுடன் விராட் கோலி

விராட் கோலிக்கு 2-3 மாதங்கள் ஓய்வு தேவை- ரவி சாஸ்திரி

Published On 2022-01-27 05:18 GMT   |   Update On 2022-01-27 05:18 GMT
தோனி விட்டு சென்ற இடத்தை நிரப்புவது எளிதல்ல. ஆனால் கோலி விரைவாக தலைமை பொறுப்பை எடுத்துகொண்டு டெஸ்ட் அணியை சிறப்பாக வழி நடத்தினார் என ரவி சாஸ்திரி கூறினார்.
மும்பை:

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து அவரை குறித்து சர்ச்சைகளும், விமர்சனங்களும் தொடர்ந்து எழுகின்றன. விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதற்கு அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தரும் அழுத்தமே காரணம் என பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி கண்டிப்பாக 2-3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

விராட் கோலிக்கு 33 வயது தான் ஆகிறது. அவர் இன்னும் 5 வருடங்கள் நல்ல கிரிக்கெட் வீரராக வலம் வரலாம். அவர் வெளியே வரும் பிரச்சனைகளை மறந்துவிட்டு, அமைதியுடன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். அவர் போட்டிகளில் இருந்து 2-3 மாதங்கள் ஓய்வு எடுத்து வந்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நான் கருதுகிறேன். 

விராட் கோலி 3-4 வருடங்களுக்கு அரசரை போன்று இருப்பார். அவரால் அணிக்கு வெற்றியை தேடி தர முடியும். அதுபோன்ற கோலியை தான் நான் காண விரும்புகிறேன்.

தோனி விட்டு சென்ற இடத்தை நிரப்புவது எளிதல்ல. கோலி விரைவாக தலைமை பொறுப்பை எடுத்துகொண்டார். டெஸ்ட் அணியையும் சிறப்பாக வழி நடத்தினார்.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.
Tags:    

Similar News