ஆட்டோமொபைல்
ரெனால்ட் கைகர்

ரெனால்ட் கைகர் அறிமுக விவரம்

Published On 2021-01-07 10:53 GMT   |   Update On 2021-01-07 10:53 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் எஸ்யுவி மாடலை ஜனவரி 28 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. முன்னதாக இந்த மாடல் கான்செப்ட் வெர்ஷன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. 

புதிய ரெனால்ட் கைகர் மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், எல்இடி டிஆர்எல்கள், ஸ்ப்லிட் டெயில் லேம்ப் டிசைன், ஸ்கப் பிளேட்கள், ரூப் ரெயில்கள், டூயல் டோன் அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.



அந்த வகையில் சமீபத்திய ஸ்பை படங்களில், புது ரெனால்ட் கைகர் மாடல் சன்ரூப் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ரெனால்ட் கைகர் பிளாட்பார்ம் மற்றும் என்ஜின் உள்ளிட்டவை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் எஸ்யுவியில் வழங்கப்பட்டதை போன்றே உள்ளது.

புதிய கைகர் மாடலின் உள்புறம் பல்வேறு புது அம்சங்கள், மேம்பட்ட கனெக்டிவிட்டி மற்றும் சவுகரிய வசதிகள் வழங்கப்படுகிறது. இந்த கார் மல்டி-பன்ஷன் ஸ்டீரிங் வீல், மவுன்டெட் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News