செய்திகள்
கோப்புப்படம்

100 சதவீத பயணிகளுடன் உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதி

Published On 2021-10-12 17:12 GMT   |   Update On 2021-10-12 17:12 GMT
கொரோனா தொற்று காரணமாக உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் இருக்கைகளை நிரப்புவதற்கு கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில், தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாதங்கள் கழித்து விமான சேவை மீண்டும் தொடங்கியது. அப்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து 33 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

அதன்பின் செப்டம்பர் மாதம் 72.5 சதவீத பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 80 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இருந்தாலும் கொரோனா தொற்றின் 2-வது அலையின்போது கடந்த ஜூன் மாதம் 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 65 சதவீதம், 72.5 சதவீதம் என அதிகரிக்கப்பட்டது.



இந்த நிலையில் வருகிற திங்கட்கிழமையில் (அக்டோபர் 18) இருந்து 100 சதவீத பயணிகளை ஏற்றிச் செல்ல விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்கள் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News