ஆன்மிகம்
கன்னியகோவில் பச்சைவாழி அம்மன் கோவில் திருவிழா பொங்கல் வைத்து வழிபாடு

கன்னியகோவில் பச்சைவாழி அம்மன் கோவில் திருவிழா பொங்கல் வைத்து வழிபாடு

Published On 2020-08-10 05:39 GMT   |   Update On 2020-08-10 05:39 GMT
கன்னியகோவில் பச்சைவாழி அம்மன் கோவிலில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கிருமாம்பாக்கம் அருகே கன்னியகோவிலில் பழமை வாய்ந்த மன்னாதீஸ்வரர், பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 4-வது வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு தீமிதி திருவிழா ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். காலையில் வள்ளி,தெய்வானை-முருகன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலையில் பக்தர்கள் அனுமதியின்றி கோவிலுக்குள்ளேயே தீமிதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி அரசின் வழிகாட்டுமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், தன்வந்திரி ஆகியோர் கண்காணித்தனர்.
Tags:    

Similar News