செய்திகள்
லங்கா பிரிமீயர் லீக்

முக்கிய வீரர்கள் விலகல், கொரோனாவால் வெளிநாட்டு வீரர்கள் பாதிப்பு: தடைகளை தாண்டி லங்கா பிரிமீயர் லீக்

Published On 2020-11-20 18:00 GMT   |   Update On 2020-11-20 18:00 GMT
லங்கா பிரிமீயர் லீக் வருகிற 26-ந்தேதி தொடங்கும் நிலையில் முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் போர்டு லங்கா பிரிமீயர் லீக்கை தொடங்க முடிவு செய்தது. கொரோனா வைரஸ் தொற்றால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இறுதியாக வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்க இருக்கிறது.

வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சோஹைல் தன்வீர் மற்றும் கனடாவின் ரவீந்த்ரபால் சிங் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய வீரர்களான மலிங்கா, கிறிஸ் கெய்ல் ஏற்கனவே விலகுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவின் டு பிளிஸ்சிஸ் இங்கிலாந்து தொடருக்கு தயாராக வேண்டியதால் விலகியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த ரவி போபரா, ஒரு அணியின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் கபிர் அலி ஆகியோரும் விலகியுள்ளனர்.

எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை நீக்கி போட்டிகள் நடைபெறும் என இலங்கை பிரிமீயர் லீக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News