ஆட்டோமொபைல்
ஆடி இ டிரான்

விரைவில் இந்தியா வரும் ஆடி இ டிரான்

Published On 2021-05-28 06:33 GMT   |   Update On 2021-05-28 06:33 GMT
ஆடி நிறுவனத்தின் இ டிரான் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஆடி நிறுவனம் தனது இ டிரான் மாடலை இந்திய வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறது. இ டிரான் மாடல் ஆடி நிறுவனத்தின் முதல் ஆல் எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். வரும் மாதங்களில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.



இ டிரான் மாடல் முன்புறம் ஒற்றை பீஸ் பிளான்க்டு-அவுட் கிரில் வழங்கப்படுகிறது. இத்துடன் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், இ டிரான் மாடலுக்கான பிரத்யேக டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. டெயில் லேம்ப்கள் மெல்லியதாகவும், கூர்மையாகவும் உள்ளது. இது டெயில்கேட் முழுக்க நீள்கிறது. 

இந்த காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்ப்படுகின்றன. இவை இணைந்து 402 பிஹெச்பி பவர், 664 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 400-க்கும் அதிக கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும்.
Tags:    

Similar News