ஆட்டோமொபைல்

எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க டொயோட்டா - சுபாரு இடையே புதிய ஒப்பந்தம்

Published On 2019-06-08 10:18 GMT   |   Update On 2019-06-08 10:18 GMT
டொயோட்டா மற்றும் சுபாரு இணைந்து பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க இருக்கின்றன.



டொயோட்டா மற்றும் சுபாரு நிறுவனங்கள் ஒன்றிணைந்து பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட இருக்கின்றன. 

இருநிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பெரிய அளிவலான பயணிகள் வாகனங்களையும், சி பிரிவு பேட்டரி எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களையும் இருநிறுவனங்களின் சொந்த பிராண்டிங்கில் அறிமுகம் செய்ய இருக்கின்றன. இரு நிறுவனங்களும் தங்களின் முழு பலத்தை பயன்படுத்தி, புதிய வாகனத்தை சந்தையில் தனித்துவம் மிக்கதாக உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. 



முன்னதாக இரு நிறுவனங்கள் இணைந்து ரியர்-வீல்-டிரைவ் தொழில்நுட்பத்தை உருவாக்கி அதனை டொயோட்டா 86 மற்றும் சுபாரு பி.ஆர்.இசட். மாடல்களில் 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தன. இதே தொழில்நுட்பம் சுபாருவின் கிராஸ்டெக் ஹைப்ரிட் மாடலிலும் வழங்கப்பட்டது.

பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை வணிக மயமாக்க அதிக திறன் கொண்ட பேட்டரிகளை பயன்படுத்துவதோடு, அவற்றை பிரபலப்படுத்த வேண்டும். பேட்டரி விநியோகத்தை பொருத்தே பேட்டரி எலெக்ட்ரிக் வாகனத்திற்கான தட்டுப்பாடு இருக்கும். இதுதவிர செலவீனங்கள், விநியோகம் மற்றும் விற்பனை முறை என பல்வேறு சவால்களை இருநிறுவனங்களும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்யேக பிளாட்ஃபார்மை உருவாக்க இருநிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இந்த பிளாட்ஃபார்ம் பல்வேறு வாகன பிரிவுகளில் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News