செய்திகள்
கோப்புபடம்

வீடுகளில் காய்கறி தோட்டம் - மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

Published On 2021-09-27 05:10 GMT   |   Update On 2021-09-27 05:10 GMT
துரித உணவினை இளைஞர்கள் தவிர்த்து இயற்கையான காய்கறிகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்பூர்:

ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில்  மாணவர்களுக்கான சமையல் காய்கறி தோட்டம் பயிற்சி முகாம் கல்லூரியில் நடந்தது.

என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். பேராசிரியர் ரபீத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காய்கறி தோட்டம் அமைக்க மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

ரபீத் பேசுகையில்:

முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்  உங்கள் இல்லங்களுக்கு சென்று ஊட்டச்சத்து மிக்க சமையல் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும். துரித உணவினை இளைஞர்கள் தவிர்த்து இயற்கையான காய்கறிகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றார்.  

40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று முள்ளங்கி, தக்காளி, மிளகாய் போன்ற 10 வகையான விதைகளை விதைத்து காய்கறி தோட்டம் அமைத்தனர். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
Tags:    

Similar News