செய்திகள்
கோப்புபடம்.

குடியிருப்பு வீடு பயனாளிகள் தேர்வு - அதிகாரிகள் கிடுக்கிப்பிடி

Published On 2021-09-20 08:43 GMT   |   Update On 2021-09-20 08:43 GMT
விண்ணப்பங்களை வருவாய்த்துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையினர் மறு பரிசீலனை செய்து உறுதிப்படுத்துவர்.
அவிநாசி:

திருப்பூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்கு பயனாளிகளை தேர்வு செய்ய மனு பெறப்படுகிறது. 

இதற்காக விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அட்டையாள அட்டை, வங்கி இருப்பு புத்தக நகல் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

முதற்கட்டமாக அந்தந்த பேரூராட்சி, நகராட்சி நிர்வாகத்தினர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வர். விண்ணப்பங்களை வருவாய்த்துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையினர் மறு பரிசீலனை செய்து உறுதிப்படுத்துவர். 

விண்ணப்பதாரர்களின் சொத்து விவரங்கள், வங்கிக்கடன், ரொக்க இருப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆதார் எண் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் உண்மையான பயனாளிகளை எளிதாக தேர்வு செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
Tags:    

Similar News