வழிபாடு
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

Published On 2022-02-11 07:14 GMT   |   Update On 2022-02-11 07:14 GMT
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவிலுக்கு செல்ல 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் திறக்கப்படும்.

அதன்படி மாசி மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 17-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவின் போது தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டனர். தற்போது கோவிலுக்கு செல்ல 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மாசி மாத பூஜைகள் முடிந்து வருகிற 17-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். அதன்பின்பு உத்திர திருவிழாவுக்காக மார்ச் மாதம் 8-ந் தேதி கோவில் நடை திறக்கப்படும். உத்திர திருவிழா கொடியேற்றம் மார்ச் 9-ந் தேதி நடக்கிறது.
Tags:    

Similar News