செய்திகள்
மாயாவதி

குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தலில் ‘சீட்’ கிடையாது: மாயாவதி அறிவிப்பு

Published On 2021-09-11 02:46 GMT   |   Update On 2021-09-11 02:46 GMT
வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சி பொறுப்பாளர்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதன்மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய முடியும் என்றும் மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ :

உத்தரபிரதேசத்தின் மா தொகுதியில் மாபியா கும்பல் தலைவர் முக்தர் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவர் பஞ்சாப் மாநிலம் பாண்டா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், குற்றப்பின்னணி கொண்ட யாரும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்கள் என்று அக்கட்சி தலைவர் மாயாவதி நேற்று அறிவித்தார்.

வருகிற தேர்தலில் மா தொகுதியின் வேட்பாளராக முக்தர் அன்சாரிக்கு பதிலாக, மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பீம் ராஜ்பார் நிறுத்தப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சி பொறுப்பாளர்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதன்மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய முடியும் என்றும் மாயாவதி கூறியுள்ளார்.

Tags:    

Similar News