செய்திகள்
பாஜக

பாராளுமன்ற மேலவை தேர்தல் - வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக

Published On 2020-10-26 18:07 GMT   |   Update On 2020-10-26 18:07 GMT
பாராளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு போட்டியிடும் 9 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாராளுமன்ற மேலவைக்கான 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் 25-ம் தேதியுடன் முடிவடைகின்றன. இவற்றில் உத்தர பிரதேசத்தில் 10 இடங்களும், உத்தரகாண்டில் ஓரிடமும் காலியாகும்.

மேலவை எம்.பி. பதவிக்கான இடங்கள் காலியாகும் சூழலில் அவற்றை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் நவம்பர் 9-ம் தேதி காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் ஓட்டுப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதன்பின்னர் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு போட்டியிடும் 9 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது.

இதில், உத்தர பிரதேசத்தில் 8 இடங்கள், உத்தரகாண்டில் ஓரிடம் என மொத்தம் 9 இடங்களுக்கான வேட்பாளர்கள் பெயர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது.  இதில், மத்திய மந்திரி ஹர்தீப் சிங்கும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News