வழிபாடு
திருப்பரங்குன்றம் கோவில் முன்பு பக்தர்கள் கோபுர தரிசனம் செய்த காட்சி.

கொரோனா கட்டுப்பாடால் கோபுர தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2022-01-08 04:13 GMT   |   Update On 2022-01-08 04:13 GMT
அரசு விதித்த தடை காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியே நின்று சூடம் ஏற்றி சுவாமியை கும்பிட்டனர்.
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவல் காரணமாக வாரத்தின் இறுதி நாளான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என்று அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் மார்கழி மாதம் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் அனைவரும் அதிகாலையிலேயே நேற்று காலை கோவிலுக்கு சென்றனர்.

ஆனால் கொரோனா காரணமாக பக்தர்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. மேலும் கூடலழகர் பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர்கோவில், திருமோகூர் கோவில்களுக்கு பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர்.

ஆனால் அரசு விதித்த தடை காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியே நின்று சூடம் ஏற்றி சுவாமியை கும்பிட்டனர். மேலும் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமியை காண முடியாமல் ஏமாற்றுத்துடன் கோபுரத்தை தரிசனம் செய்து சென்றனர்.
Tags:    

Similar News